Tuesday, September 3, 2013

பழ மொழிகள்

பழ மொழிகள் 

''எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏரின் மழை பெய்யும் ''

எறும்பானது தனது முட்டையை வேறிடத்திற்கு எடுத்து சென்றால் கண்டிப்பாக மழை பெய்யும் .

''கறந்த பாலை காய்ச்சாமல் குடித்தால் காச நோய தானே வரும் ''

கறந்த பாலை காய்ச்சாமல் குடித்தால் காச நோய வரும் .

''அகலக் கால் வைக்காதே ''

ஒருவன் தனக்குத் தெரியாத செயலைச் செய்யக் கூடாது .

''அடை மழை விட்டாலும் செடி மழை விடாது ''

அடை மழை நின்றாலும் செடியில் விழுந்த நீர் விடாது .

''கள் விற்று கல பணம் சம்பாதிப்பதை விட ,கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல் ''

கள் விற்று நிறைய பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதே மேல் ஆகும் .


மற்ற பழ மொழிகள் ...யாம் ரசித்தவை

''ஆள் இலப்பாய் இருந்தால் எருது கூட மச்சான் முறை கொண்டாடும் ''

''தாழ்விலே பெருமையும் வாழ்விலே தாழ்மையும் வேண்டும் ''

'' உப்பிட்டவரை உள்ளளவும் நினை ''

''உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது''

No comments:

Post a Comment